திரைப்படங்கள் இளம் சமுதாயத்தை குறிப்பாக மாணவ சமூகத்தை சீரழிப்பதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது உண்டு.
இந்த நிலையில் இவ்வாறு பாடசாலை நிர்வாகம் மாணவர்களை திரைப்படங்கள் மீது ஈடுபாடு கொள்வதற்குத் தூண்டும் வகையில் தனது காலாண்டுப் பரீட்சைக்கான வினாத்தாளை தயாரித்துள்ளது.
குறித்த பாடசாலையின் பொது அறிவுப் பரீட்சைக்கான கேள்வித்தாளில் “பசங்க” திரைப்படத்தின் கதாநாயகன் யார் என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.
பொது அறிவுக்கும் சினிமாவுக்கும் எந்த வித தொடர்பும் இல்லாத நிலையில் இந்த பரீட்சைத்தாளில், குறித்த வினா உள்ளடக்கப்பட்டுள்ளமை பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதேவேளை, திரைப்படத்தில் இருந்தும் பாடசாலை பரீட்சைகளுக்கு கேள்விகள் தயாரிக்கப்படும் நிலையில், திரைப்படங்களை பார்க்காமல் விடலாமா? என்ற கேள்வியும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.