யாழ் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

275
யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்ப டையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றய தினம் இரவு நெடுந்தீவு கடற்பகு தியில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறித்த மீனவர்கள் தமிழ்நாடு இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து ஒரு படகையும் கைப்பற்றியுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பதிவுகளை மேற்கொண்டதையடுத்து யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்திருந்தனர்.

1-june-fishermen

SHARE