இலங்கையின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சி வற்றிப் போகும் அபாயம்

359
நாட்டில் நிலவிவரும் கடும் வரட்சியான காலநிலையால் மலையகத்தில் உள்ள  பல நீர்நிலைகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதோடு, தியலும நீர்வீழ்ச்சியில் நீரின் அளவு குறையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே போல் பதுளை மாவட்டத்திலும் நிலவி வரும் வரட்சியான காலநிலையால் கொஸ்லந்தை பிரதேசம் உட்பட பல நீர்நிலைகளின் நீர்மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாகவே 628 அடி உயரமான, இலங்கையின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியான தியலும நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.

கொஸ்லந்தை உட்பட பல பிரதேசங்களில் நீர் வீழ்ச்சிகளில் நீர்மட்டம் குறைவடைந்து காணப்படுவதால் குறித்த பிரதேசத்தில் நீர்த்தட்டுப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்பும் காணப்படுவதாக கூறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வரட்சியான காலநிலை காரணமாக கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் குறைவடைந்து, 25 வருடங்களின் பின்னர் நீரில் மூழ்கிய பௌத்த விகாரை மற்றும் பழைய நகரம் மற்றும் கிராமம் மக்களின் கண்களுக்கு தெரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

f-1

SHARE