அதன்படி குறித்த பகுதியில் மது அருந்தப்பட்ட தடயங்கள் மற்றும் பாலியல் செயற்பாடுகள் இடம்பெற்றமைக்கான சான்றுகளும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் உடனடியாக பிரதேச செயலாளர் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், உடன் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் அனர்த்த பாதுகாப்பு மற்றும் கிராம அபிவிருத்தி தொடர்பிலான ஆய்வு அறிக்கை தாயாரிக்கும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றன. அதன் ஒரு அங்கமாகவே இந்த பகுதி பார்வையிடப்பட்டுள்ளது.
அத்துடன், கிராமத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அபவிருத்தி பணிகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், பொன்னகர் கிராமத்தில் ஏற்படும் அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பதற்கான திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.