மகிழடித்தீவிலிருந்து கொக்கட்டிச்சோலைக்கு செல்லும் பிரதான வீதியில் மீனாட்சிமரத்தடியில் இன்று துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் பயணம் செய்த இருவரும் காயமடைந்த நிலையில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு மாற்றுப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வைத்தியர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.