இந்தோனேசியாவில் உள்ள ஜகர்தா விமான நிலையத்தில் பயணிகள் விமானங்கள் மோதியதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.ஜகார்தா விமான நிலையத்தின் ஓடுபாதையில் வைத்தே இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹலிம் பெரடன குசுமா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலையில் பட்டிக் எயார் போயிங் 737 என்ற விமானத்திற்கும் ஏடிஆர் 72 விமானத்திற்கும் இடையிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் காரணமாக விமானத்தின் இறக்கை பகுதியில் நெருப்பு பற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட விமான நிலைய அதிகாரிகள், துரிதமாக செயல்பட்டு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சம்பவத்தை அடுத்து 49 பயணிகளும் குழு உறுப்பினர்களும் பாதுகாப்பான நிலையில் அவசர தடுப்பு பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |