லிந்துலை – இராணிவத்தைக்கு செல்லும் இப்பாதை செப்பனிடப்படாமல் இருப்பதனால் மக்கள் பல துயரங்களை அனுபவித்து வருவதாக இப்பகுதி மக்கள் அங்கலாகின்றனர்.
இவ்வீதி சேதமடைந்து காணப்படுவதால் மழை காலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் வீதியில் நடந்து செல்வதில் கடும் அசௌகரியங்களுக்கு உட்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வீதியின் ஒரு பகுதி கொங்கீறிட் இடப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பகுதியே புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து செய்வது மிகவும் கடினமாக உள்ளதாத பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்தோடு இவ்வீதி 6 கிலோமீற்றர் தூரம் சேதமடைந்து காணப்படுவதாகவும், நோயாளிகள் லிந்துலை வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற போதிலும் இந்த குன்றும் குழியுமான வீதியினூடாகவே செல்ல வேண்டியுள்ளதாகவும் அதனால் நோயாளிகள் உட்பட கர்ப்பிணி தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்.
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட இவ்வீதியை விரைவில் புனரமைத்து தருமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
(க.கிஷாந்தன்)