
கொழும்பு போட் சிட்டி திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனம், இலங்கையில் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சுமார் 790 நிபந்தனைகளை குறித்த நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்;டுள்ளது.
சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் குறித்த நிபந்தனைகள் அமைந்துள்ளன.
இதில் ஒரு நிபந்தனையாக, சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள 46ஆயிரம் சதுரமீற்றர் கடல் காணிப்பகுதி சர்வதேச நச்சுக்களை கண்காணிக்கும் அமைப்பினால் எந்த நேரத்திலும் கண்காணிக்கப்படும்.
அத்துடன் குறித்த பிரதேசத்தில் தேவையற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றாடலுக்கு தீங்கை விளைவிக்கும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது.
இதேவேளை, குறித்த காணிப்பரப்பில் மணல் அகழ்வுகள் இடம்பெறும் போது அதற்கு இலங்கை காணி விஸ்தரிப்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.