பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த பதவி உயர்வு வழங்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேருக்கான வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், அடுத்த வாரம் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே மேலும் குறிப்பிட்டுள்ளார்.