
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தலைமைத்துவத்திலான தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக விமல் வீரவங்ச பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தான் எழுத்துமூலம் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவித்திருந்த போதிலும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அவர் இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டு அறிவிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இதன்போது அறிவித்துள்ளார்.