நாட்டின் பல பாகங்களிலும் இன்று கடும் மழை பெய்யலாம்

276
heavy-rain2
இன்று நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை பெய்யலாம் என வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் தென்மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை பெய்யலாம் எனவும் இதனால் 75 மில்லிமீற்றர் அளவில் நீர் மட்டம் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், வடக்கு பகுதியில் இம்மாதம் 5 தொடக்கம் 14ஆம் திகதி வரையில் சூரியன் உச்சமளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றைய தினம் ஓப்பனாயக்க,வடக்கு-களுத்துறை,மொலமுர மற்றும் மகாவெல்லத்தோட்டம் ஆகிய பகுதிகளில் நண்பகல் 12.03 மணியளவில் சூரியன் உச்சமளிப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE