இலங்கையில் அதிகரித்துள்ள சுற்றலா பயணிகளின் வருகை!

278

இலங்கையில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடமும் 22.8 வீதத்திற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல் வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், கடந்த வருடம் மார்ச் மாதம் வரை 157,051 உல்லாச பிரயாணிகளின் வருகை தந்ததாகவும் இவ்வருடம் மார்ச் மாதம் வரையிலும் 584,818 உல்லாச பிரயாணிகள் வருகை தந்திருப்பதாகவும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.

முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தை விடவும் 22.1%இனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், வட அமெரிக்காவில் 21% உல்லாச பிரயாணிகளும் அமெரிக்காவில் 21.3% பிரயாணிகளும் வருகை தந்துள்ளதாகவும் கனடாவில் உல்லாசப்பிரயாணிகளின் வருகை 23.5% இனால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகளவிலான பிரயாணிகள் ஐரோப்பா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சென்றிருந்தமையையும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

foreigners

SHARE