கல்வி அமைச்சராக இராதாகிருஷ்ணன்

246

கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் இன்று (புதன்கிழமை) பதில் கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வெளிநாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவருக்கு பதிலாக பதில் கல்வி அமைச்சராக இராதாகிருஷ்ணன் செயற்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கு அமைய இராதாகிருஷ்ணன் பதில் கல்வி அமைச்சராக தனது பணியை முன்னெடுக்கவுள்ளார்.

இலங்கையின் கல்வி வரலாற்றில் தமிழ் மொழி பேசும் கல்வி இராஜங்க அமைச்சராக இதற்கு முன்னர் ராஜமனோகரி குலேந்திரன் காணப்பட்ட நிலையில், தற்போது இராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பதில் கல்வி அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டுள்ளமையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.rata

SHARE