
ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் 60 இணைய தளங்களை முடக்குவது குறித்து அராசங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிரவாத அமைப்பிற்கு சொந்தமான இந்த இணைய தளங்கள் பலவற்றை பல நாடுகள் தடை செய்துள்ளன.
எனினும் இந்த இணைய தளங்களின் பல, ஐரோப்பிய நாடுகளின் இணைய நிறுவனங்களினால் செயற்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் 44 இணைய தளங்களை இந்தியா முடக்கியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 45 குடும்பங்கள் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்ள சென்றுள்ளதாக கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அடுத்து அரசாங்கம் இணைய தளங்களை முடக்குவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, புலனாய்வுப் பிரிவின் இந்த தகவல்களை பொய்ப்பிக்க அரச சார்பற்ற நிறுவனமொன்று முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.