
அவுஸ்திரேலியாவுடன் நீண்டகால உறவை மீண்டும் இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது.
வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நேற்று அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஸப்பை சிட்னியில் சந்தித்த போது இந்த உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளார்.
கடந்த 4ம் திகதி முதல் நேற்று வரை சமரவீர அவுஸ்திரேலியாவில் விஜயத்தை மேற்கொண்டார்.
2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்ற பின்னர் அமைச்சர் அவுஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும்.
இலங்கை அரசாங்கம் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்திகளுடன் சமாதானத்தையும் கொண்டு வர முயற்சிப்பதாக ஜூலி பிஷப்புடனான கலந்துரையாடலின் போது
அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.