அஸ்கிரிய பீடாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கை இன்று!

262
thumb_large_smiling-albino-monks
கலகொட அத்தாதஸ்ஸி தேரரின் மறைவினால் ஏற்பட்டுள்ள அஸ்கிரிய பீடாதிபதி வெற்றிடத்திற்கான தெரிவு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

அஸ்கிரிய பீடாதிபதி பதவியை பெற்றுக் கொள்ள இரண்டு உபபீடாதிபதிகள் முயற்சித்து வருகின்றனர்.

பதுளு முதியங்கன ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி வரகாகொட ஞானரதன மற்றும் சொலஸ்மஸ்தனாதிபதி வென்டருவே உபாலி போன்ற மாநாயக்க தேரர்களே இவ்வாறு பதவியை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

22ம் அஸ்கிரிய பீடாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கையே இன்று மாலை நடைபெறவுள்ளது.

கடந்த காலங்களைப் போன்று பெரும்பாலும் ஒரு மாநாயக்க தேரர் சுய விருப்பில் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இருவரும் போட்டியிட்டால் அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த 19 பௌத்த பிக்குகளும் இணைந்து மிகவும் பொருத்தமான ஒருவரைத் தெரிவு செய்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மன்னராட்சிக் காலத்தினைப் போன்றே வெளிநபர்களின் தலையீடு இன்றி இந்த தெரிவு மேற்கொள்ளப்படவுள்ளது.

SHARE