
கலிபோர்னியாவில் உள்ள பசில் ராஜபக்சவின் மகனது வீட்டில் இவர்கள் சமையல்காரர்களாக பணியில் அமர்த்தப்பட்டனர்.
பாரிய ஊழல்கள் மற்றும் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு கடற்படை வீரர்களும் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தோட்டக்காரர்களாகவே அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் அவர்கள் பின்னர் சமையல்காரர்கள் ஆக்கப்பட்டனர்.
பல வருடங்கள் அமெரிக்காவில் பணியாற்றிய நிலையில் அவர்கள் இருவரும் இலங்கை திரும்பி திருமண பந்தத்தில் இணைந்தனர்.
இதில் ஒருவர் தமது கடவுச்சீட்டை மீளக் கையளிக்கும் போது பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவின் உத்தரவின் பேரில் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்
மற்றும் ஒருவர் 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இலங்கைக்கு அழைக்கப்பட்டார்.
இந்த இரண்டு கடவுச்சீட்டுக்களும் 2017ம் திகதி வரை பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.