
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மீளவும் ஆட்சி கைப்பற்றும் நோக்கில் போர்ப் பீதியை மக்கள் மீது திணிக்க முயற்சி;க்கின்றனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
இதனால் நாட்டில் மீளவும் போர் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது. மீளவும் பிரச்சினைகள் இடம்பெறக்கூடாது என்ற அடிப்படையிலேயே நாம் செயற்பட்டு வருகின்றோம்.
போர் வெற்றிக்கு பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்வு நிலைக்கு திருப்ப எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாம் ஆராய்;ந்து வருகின்றோம்.
காணிகள் தொடர்பில் அராங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த சட்டம் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக்கூடியது.
கடந்த அராங்கம் வடக்கின் வசந்தம் என்ற பெயரில் தமக்கு வசந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது என அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.