ரயிலுடன் மோதுண்ட டிப்பர் : ரயிலில் சென்ற ஒருவர் பலி

275
accident2
உனுப்பிட்டிய – வனவாசல பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் புறக்கோட்டை – ரம்புக்கன ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

மேற்படி விபத்தில், ரயில் மிதிபலகையில் தொங்கி கொண்டு வந்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ரயிலுடன் மோதுண்ட டிப்பர் வாகனத்தில் சென்றவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விபத்துக்குள்ளான  டிப்பர் பாதுகாப்பற்ற கடவையில் சென்றுள்ளமையினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  • ரயிலுடன் மோதுண்ட டிப்பர் : ரயிலில் சென்ற ஒருவர் பலி

மேற்படி விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும்,  இறந்தவர் தொடர்பில் எவ்விதமான தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

 

SHARE