
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் அவர்களின் அழைப்பின்பேரில் எதிர் கட்சித் தலைவரின் விஜயத்தின்போது மண்டூரில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையை உத்தியோக பூர்வமாக காலை 09.30 மணிக்கு திறந்து வைக்கும் நிகழ்விலும் மற்றும் சித்தாண்டியில் அமைந்துள்ள கால் நடைத் தீவன உற்பத்தி தொழிற்சாலையையும் மாலை 3.00 மணிக்கு திறந்து வைக்கும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணப்பிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
இந் நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் உட்பட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.