
வெள்ளவத்தை இராமகிருஸ்ண மிஷனில் இடம்பெற்ற தேசிய ஒற்றுமையைக் கட்டி எழுப்பும் மாநாட்டில் கலந்துக் கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஆலயங்கள், விகாரைகள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றில் ஒருபோதும்
இந்த இனவாதம் பற்றி பேசப்படுவதில்லை. மாறாக சில அரசியல்வாதிகளே இந்த இனவாதத்தை
தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எல்லா மதங்களும் சமூகத்தில் ஒற்றுமையாக வாழ்வது பற்றியே போதனைகளை செய்கின்றன. ஆனால் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒற்றுமையாக வாழும் மக்கள் மத்தியில் இனவாதத்தினை விதைக்கிறார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தேவைகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்காமல் நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானமான சூழ்நிலையை மையப்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யம் நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் ஈடுபட வேண்டும் எனவும் அமைச்சர் திகாம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.