
வடமாகாணத்தின் நாயாறு மற்றும் கொக்கிளாய் ஆகிய கிராமங்களில் உள்ள சிங்கள மீனவக் குடும்பங்களை அகற்றுமாறு வடமாகாண உறுப்பினர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் நிராகரித்துள்ளார்.
கடந்த வாரம் கடற்றொழில் அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் மீனவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் முல்லைத்தீவு, நாயாறு மற்றும் கொக்கிளாய் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட போதே அமைச்சரிடம் உறுப்பினர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இந்த வேண்டுகோளை நிராகரித்த அமைச்சர் குறித்த சிங்கள மீனவக் குடும்பங்கள் இந்தப்பிரதேசத்திலே பிறந்தவர்கள் என்றும் யுத்தத்திற்கு முன்பிருந்தே இந்தப்பகுதிகளில் இவர்கள் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொக்கிளாயில் 400 சிங்கள குடும்பங்களும், நாயாறில் 265 சிங்கள குடும்பங்களும் வசித்து வருகின்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த சிங்கள மீனவர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு பெற்றுக் கொடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்