
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணியாளர்கள் இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக துறைமுக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 4ம் திகதியும், நேற்றைய தினமும் இவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாகவே பணியாளர்கள் மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துறைமுக பணியாளர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் துறைமுகத்திற்குள் சில பிரிவுகளை தனியார் மயப்படுத்தலை நிறுத்துதல், கொடுப்பனவுகளை அதிகரித்தல், புதிய பணியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்ளும் போது பரிந்துரைகளுக்கு அப்பால் இணைத்துக் கொள்ளல் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.