கடும் வரட்சியிலும் முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலய கிணற்றில் அதிசயம்….!

276

முல்லைத்தீவில் கடும் மழை பெய்து சுமார் நான்கு மாதங்களிற்கு மேல் கடந்து தற்போது கடும் வெப்பம் நிலவி வருகின்றபோதும் வற்றாப்பளை கண்ணகை ஆலய வளாகத்தின் நுழைவிடத்தில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்து நில மட்டத்திற்கு மேலாக சுமார் 2 உயரத்திலிருந்து கிணற்றுக் கட்டில் உள்ள குழாய் மூலம் தற்போதும் தொடர்ச்சியாக நீர் வெளியேறிய வண்ணம் இருக்கின்றது.

இதற்கு அண்மையில் எந்தவொரு நீர் நிலைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இதுகுறித்து வற்றாப்பளை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரும் வற்றாப்பளை கோவில் நிர்வாக சபைத் தலைவருமாகிய ம.விக்கி கருத்துத் தெரிவிக்கையில்,

இவ்வாறு இரண்டு கிணறுகளில்லிருந்து கடந்த ஒருவருடத்திற்கு மேலாக நீர் வெளியேறியவண்ணம் உள்ளதாகவும் இதுகும் ஒரு புதுமையான நிகழ்வு என்று குறிப்பிட்டதுடன் ஆலயக் குருக்களின் வாசஸ்தலத்திற்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்தும் இவ்வாறு தொடர்ச்சியாக நீர் வெளியேறி வருவதாக குறிப்பிட்டார்.

well

well01

SHARE