தற்போது உலகையே ஆட்டிக்கொண்டிருக்கும் விடயமாக மாறியுள்ளது பனாமா பத்திரம் என்பது யாரும் மறுக்கமுடியாத விடயமாகும்.
இந்தநிலையில், குறித்த மோசடியில் இலங்கை நபர்களும், மாட்டிக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த விடயத்தை “டிரான்ஸ் பெரன்ஸி ஸ்ரீ லங்கா” எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இது தற்போது வரை நிருபிக்கப்படாவிட்டாலும் அதனை உரியமுறையில் விசாரணை செய்து உண்மையை கண்டறிய வேண்டும். என இந்த நிறுவனத்தின் சிரேஸ்ட முகாமையாளர் சான் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இந்த பத்திரிகையில் உலகின் பல்வேறு பிரபல்யங்களின் பெயர்கள் சிக்கித்தவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.