சந்திரிகாவின் தீர்வு யோசனையை பிரபாகரனிடம் சமர்ப்பித்தேன் – மனோ

283

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் சமாதான யோசனையை தாம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கையளித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தம்மை அழைத்து இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் யோசனையை பிரபாகரனிடம் கையளிக்குமாறு கோரினார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் இந்த கோரிக்கை தம்மிடம் விடுக்கப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க, தமது பாணியில் தீர்வு திட்டத்தை முன்னெடுத்தார்.

தாம், தமது பாணியில் தீர்வை முன்னெடுக்கவுள்ளதாக சந்திரிக்கா தம்மிடம் கூறியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்படி தாம், சந்திரிக்காவின் யோசனையை பிரபாகரனிடம் கையளித்தாக குறிப்பிட்ட மனோ கணேசன், இதுவே தாம் பிரபாகரனை சந்தித்த முதல் தடவை என்று தெரிவித்துள்ளார்

எனினும் அரசியல் மேலாதிக்கத்தின் காரணமாகவே சமாதான பேச்சுக்கள் தோல்வியடைந்தன என்று மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

d6a5c2fe09b4592f1a5411bcbbbe5711_L

SHARE