கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத் தொடுவாய் மீனவ மக்கள் தமது நிலங்கள் மட்டுமல்ல வாழ்வாதாரம் தந்த கடல்களையும் இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளோம் என்று கூறி இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் கொக்கிளாய் முகத்துவார களப்பிற்கான இணை நல்லாட்சித் திட்ட கலந்துரையாடல் நேற்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்றது.
அதில் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் பணிப்பாளர் எம்.சி.எல் பெனாண்டோ வழங்கிய முடிவு பாரபட்சமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கூட்டுவலைத் தொழில் இன்னமும் ஆறு மாதத்திற்கு செய்யலாம் என்று முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு அனுமதி வழங்கிவிட்டு தமிழ் மக்களுக்கு குறித்த தொழில் செய்வதற்கு தடைவிதித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.