இரு தினங்களுக்கு முன்னர் திருக்கோயில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட முள்னாள் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக செயற்பட்டு வந்த ராம் வெள்ளை வான் ஒன்றில் கடத்தப்பட்டார் இது தொடர்பாக திருக்கோவில் பொலிசில் அவரது மனைவி முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்தே உத்தியோகபூர்வமாக தாங்கள் அவரைக் கைது செய்திருப்பதாக இலங்கைப் புலனாய்வாளர்கள் அறிவித்திருந்தனர். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் ஆட்சிக் காலத்தில் பதினொராயிரம் போராளிகள் புனர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அந்த அடிப்படையின் கீழ் தளபதி ராமும் அடங்குவார். ராம் கைது செய்யப்பட்டதுக்கு பல காரணங்கள் கூறப்பட்டபொழுது இதில் முதன்மைக் காரணங்களாக விடுதலைப்புலிகள் அமைப்பை அமெரிக்க அரசாங்கத்தின் உதவியுடன் வளர்த்தெடுப்பதற்கான தலைமறைவாகியுள்ள பொட்டமான் அவர்களின் தொடர்பினை மேற்கொண்டுள்ளார் என்பதேயாகும்.
துளபதி ராமைக் கைது செய்யததுக்க இவ்வாறான காரணங்கள் தரப்படுகின்றன. இருபத்தைந்து வருடங்கள் விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர் தளபதி ராம். வன்னிப் படைநகர்வுகள் நகர்த்தப்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஆயிரக்கானக்கான போராளிகளை காட்டு வழியாக நகர்த்திச் சென்று கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் தனது நிலைகளை பலப்படுத்திக் கொண்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் வெளிநாடுகளுக்குச் தப்பிச் செல்வதற்கு வழிகளை அமைத்துக் கொடுத்தார். கிழக்கு மாகாணத்தில் கருணாவினுடைய செயற்பாடுகள் கையோங்கியிருந்த காலத்தில் கருணா குழுவினர் மீதான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தார். 2009ம் ஆண்டு போர் முடிவுற்றிருந்த பொழுது மட்டக்களப்பிலுள்ள கஞ்சிகுடிச்சாறு ஆற்றுப் பகுதியிலிருந்து தமது ராணுவ ரீதியான படைநகர்வுகளை நகர்த்திக் கொண்டிருந்தார். இறுதிவரை கலம் நின்று போராடிய தளபதி ராம் ராணுவத்தினரிடம் தந்திரோபயமாக சரணடைந்திருந்தார் என்றும் கூறப்படுகின்றது. தளபதி ரமேஷ் கருணாவின் உத்தரவின் பெயரிலேயே சித்திரவதை செய்து கொலைசெய்யப்பட்டார். இந்த காலகட்டத்தில் தளபதி ராம் கட்டுப்பகுதியிலேயே இருந்து வந்தார்.
கருணாவுடன் நெருங்கிய நண்பராக இருந்து வந்த தளபதி ராம் ஒரு கட்டத்தில் அவரை ராணுவத்தினரிடம் சரணடையுமாறு கருணா உத்தரவிட்டிருந்தார். ஏற்கானவே இவரது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆயிரத்து ஐநூறு படையணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரே தளபதி ராம் இராணுவத்தினரிடம் சரணடைந்தார் என்று கூறப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இவருக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருந்தாது.
இவரது பிள்ளைகள் வன்னியில் கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுகின்றது. இருந்தும் போராட்டத்திலிருந்து ஒதுங்கி திருக்கோவில் பகுதியில் விவசாயம் செய்து வந்தார். ஆனால் இவர் விவசாயம் செய்து வருவதை இலங்கை அரசு நம்பவில்லை. தொடர்ந்தும் கருணாவைப் போன்று காட்டிக் கொடுப்பார் என்றே இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.
விடுதலைப் புலிகளின் சிறந்த தளபதியாக இருந்த ராம் தனது வாழ்க்கையில் சாதாரண ஒரு மனிதராகவே செயற்பட ஆரம்பித்தார். இவ்வாறாக இருக்கின்ற காலகட்டத்தில் கைது செய்யப்பட்ட பல போராளிகள் துருவித் துருவி விசாரணை செய்யப்பட்டனர். அந்த அடிப்படையில் தளபதி ராம் இன்னமும் பொட்டு அம்மானுடன் சேர்ந்து புலனாய்வு நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்திற்கு தகவல் கிட்டியது. இதன் அடிப்படையில் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பொட்டு அம்மானுடைய தொப்பியினை லண்டனுக்கு அனுப்பமுயற்சிக்கும் சமயம் இலங்கைப் புலனாய்வுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் படி கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் மீள் எழுச்சி பெறுகின்றனர் என்று காரணம் காட்டி தொடர்ந்தும் பல போராளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை இவ் அரசாங்கம் செய்து வருகின்றது. இவ்வாறான நிலமை தொடருமாக இருந்தால் ஆயுதப் போராட்டத்தினை மீண்டும் இலங்கையில் வளர்க்கின்றார்கள் என்றே கருதப்படும். கடந்த கால அரசாங்கத்தில் இல்லாதவாறு தற்பொழுது நல்லாட்சி என்று கூறிக்கொண்டிருக்கும் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
திருக்கோவில்- தம்பிலுவில் பகுதியில் உள்ள தமது வீட்டில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம், கிளிநொச்சியில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் காலையில், புலிகளின் முன்னாள் தளபதி ராம், வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். இதுதொடர்பாக அவரது மனைவி திருக்கோவில் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இந்த நிலையில், ராம், கடத்தப்படவில்லை என்றும், தீவிரவாத விசாரணைப் பிரிவினால், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக நேற்று பொலிஸ் பேச்சாளர் அறிவித்திருந்தார்.
திருக்கோவிலில் கைது செய்யப்பட்ட ராம், கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு வைத்தே, அவரிடம் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ராம் கைது செய்யப்பட்டுள்ளதற்கான காரணத்தை, பொலிஸார் இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி ராமுக்கும் பொட்டு அம்மானுக்கும் எவ்வாறு தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன, பொட்டு அம்மான் எவ்வாறு லண்டனுக்குத் தப்பிச் சென்றுள்ளார். திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ராமின் கட்டளையின் கீழ் இருந்த போராளிகள் அடுத்த கட்ட நகர்வாக என்ன செய்யப்போகின்றார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ராம் தலைமையிலான படையணிகள் இன்னமும் காட்டுக்குள் இருக்கின்றதா?
தொடரும்……..