பச்சை நிறமாக மாறிய நதிகள்: காரணம் என்ன?

304

பிரான்ஸ் நாட்டில் உள்ள நதிகள் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் 12 மாகாணங்களில் உள்ள நதிகள் கடந்த சில நாட்களாக பச்சை நிறத்தில் காட்சியளித்ததால் பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். ஒருவேளை, தண்ணீர் மாசடைந்துள்ளதால் தான் இவ்வாறு பச்சை நிறமாக காட்சியளிப்பதாக அவர்கள் நினைத்துள்ளனர்.

இந்நிலையில் நதி பச்சையாக தோன்ற காரணம மாசு அல்ல தாங்கள்தான் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, பிரான்ஸின் இயற்கை வளங்கள் 10 சதவீதம் குறைந்துள்ளது.

மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தான் இவ்வாறு செய்தோம். நதிகளில் கலக்கப்பட்ட சாயம் நீர்வாழ் உயிரினங்களில் உயிருக்கு ஆபத்தானவை அல்ல. நீரின் ஓட்டத்தை கணக்கிடுவதற்காக பயன்படுத்தப்படுவது தான் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE