ரஜினி பட கவிஞருக்கு உதவிய விஷால் – படம் உள்ளே

293

ரஜினி பட கவிஞருக்கு உதவிய விஷால் - படம் உள்ளே - Cineulagam

அண்மைகாலமாக விஷால் நடிகர் சங்கம் மூலமாகவும், தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலமாகவும் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் 68 வயதான கவிஞர் காளிதாசன் 2 ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் மருத்துவ செலவுக்காக கஷ்டப்பட்டு இருக்கிறார்.

இதனை அறிந்த விஷால், தேவி அறக்கட்டளை மூலம் கவிஞர் காளிதாசனின் மருத்துவ செலவுக்காக ரூ.25 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார். இத்தொகையை காளிதாசனின் மனைவி திலகவதியிடம் விஷால் நற்பணி இயக்கத்தினர் வழங்கினர்.

இவர் ரஜினியின் அருணாச்சலம் படம், பிரசாந்தின் வைகாசி பொறந்தாச்சு போன்ற படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். அதோடு தொடர்ச்சியாக இசையமைப்பாளர் தேவா கூட்டணியில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

SHARE