
மத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையம் தனியார் மயப்படுத்தப்பட உள்ளது. ஒரு வருட காலத்திற்குள் விமான நிலையம் தனியார் மயப்படுத்தப்படும் என சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
தனியார் மயப்படுத்துவது குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் யோசனை முன்வைத்துள்ள சில நிறுவனங்களில் மூன்று சீன நிறுவனங்களும் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.
விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு அரசாங்கம் இவ்வாறு தனியார் மயப்படுத்த முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.