நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழீழ வைப்பக நகைகளை தேடுகிறார்கள் பாதுகாப்பு தரப்பினர்.

260
நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழீழ வைப்பக நகைகளை தேடுகிறார்கள் பாதுகாப்பு தரப்பினர்:

விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகத்தால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நகைகளை தேடும் பணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்புப் பகுதியில் தனியார் ஒருவருடைய காணியில், நேற்று செவ்வாய்க்கிழமை (26.4.16) மாலை 4 மணி முதல் தோண்டும் பணி, ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கோப்பாபுலவு வீதியிலுள்ள லூத்மாதா சந்தியில் இயங்கிய தமிழீழ வைப்பகத்தில் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை, அதற்கு முன்னாள் உள்ள தனியார் ஒருவருடைய காணியில் இருந்த மண் கிணற்றுக்குள் போட்டு, மூடியதாக, தமிழீழ வைப்பகத்தில் கடமையாற்றிய உறுப்பினர் ஒருவர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட முல்லைத்தீவு நீதிமன்ற நீதவானின் நேரடி பிரசன்னதுடன், தோண்டும் பணிகள் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சரியான இடத்தை தெரிவு செய்வதில் இருக்கும் சிக்கல் நிலையால் 1 ஏக்கர் அளவிலான இடம் தெரிவு செய்யப்பட்டு, அதற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இந்த தோண்டும் பணிகளை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர். நேற்று இரவு நிறுத்தப்பட்ட தோண்டும் பணிகள் மீண்டும் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

SHARE