நியூசிலாந்து அணியின் தலைவராக வில்லியம்ஸ் தெரிவு.

264
நியூசிலாந்து அணியின் தலைவராக வில்லியம்ஸ் தெரிவு:

நியூசிலாந்து கிரிக்கட் அணியின் டெஸ்ட் தலைவராக கேன் வில்லியம்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கு அணியை வில்லியம்ஸ் வழிநடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நியூசிலாந்து அணியின் சர்வதேச ஒருநாள், டுவன்ரி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் வில்லியம்ஸ் வழிநடத்த உள்ளார்.

நியூசிலாந்து டெஸ்ட் அணியை வழிநடத்தும் 29ம் தலைவர் வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பெப்ரவரி மாதம் பிரன்டன் மெக்கலம் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து, அணிக்கான டெஸ்ட் தலைவர் யார் என்பது அறிவிக்கப்படாமலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அணியை வழிநடத்த கிடைத்த வாய்ப்பு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக 25 வயதான வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

SHARE