கடல் வழிப்பாலம் தொடர்பில் இந்தியாவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை – அரசாங்கம்.

267
கடல் வழிப்பாலம் தொடர்பில் இந்தியாவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை – அரசாங்கம்:

கடல் வழிப் பாலம் தொடர்பில் இந்தியாவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்ப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடல் வழிப்பாலம் அல்லது சுரங்கப் பாதையின் ஊடாக இரு நாடுகளையும் இணைப்பது குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது.

அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமாகவோ அல்லது உத்தியோகப்பற்றற்ற ரீதியிலோ எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பாலம் அமைக்கப்பட உள்ளதாகவும் உலக வங்கி இதற்கான உதவிகளை வழங்க உள்ளதாகவும் இந்திய போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் மத்திய  அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE