ஜனாதிபதியை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்திய நபர் கைது.

263
ஜனாதிபதியை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்திய நபர் கைது:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்திய நபர் ஒருவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகநூலில் வீடியோ ஒன்றை பதிவேற்றி அதன் ஊடாக ஜனாதிபதிக்கு இந்த நபர் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த எல்.ஏ. சுகத் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய போது இந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வீசா இன்றி மலேசியாவில் தங்கியிருந்த காரணத்திற்காக அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் அடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இணையத்தின் ஊடாக இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE