
நாட்டில் மீளவும் சர்வாதிகார ஆட்சிக்கு இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சட்ட, அரசியல்சாசன மற்றும் அரசியல் நிலைமைகளில் சாதகமான தன்மையை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடும்ப அரசியலுக்கோ, ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஓராண்டுக்கு முன்னதாக 19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் சூழ்நிலைமகளை ஆரோக்கியமானதாக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு எந்தவிதமான சந்தர்ப்பமும் கிடையாது என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் காரணத்தினால் அச்சமடைந்துள்ள தரப்பினர் ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி நிறுவப்படும் என்ற நம்பிக்கையிலேயே 40 நாள் பிரச்சாரம் செய்த தமக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பூரண ஊடக சுதந்திரம் காணப்படுவதாகவும், ஊடகங்கள் பக்கச்சார்பற்ற வகையிலும் நடுநிலையாகவும் செய்திகளை வெளியிட வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.