ஒரே கட்சியினால் இரண்டு மே தினக் கூட்டங்களை நடாத்துவதில் பிழையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே தினமன்று இரண்டு கூட்டங்களை நடத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளாதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நான் நினைக்கின்றேன் மே தினமன்று இரண்டு மே தினக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று. இது வழமையானது ஒன்றே.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் ஏனையவர்களும் இணைந்து கொள்வார்கள். அதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது.
நான் ஆறுமுகன் தொண்டமானின் மே தினக் கூட்டங்களில் பங்கேற்றிருக்கின்றேன். மொனராகலை உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைபெற்ற மே தினக் கூட்டங்களில் பங்கேற்றிருக்கின்றேன்.
இது ஓர் புதிய விடயமல்ல என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.