நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
வலையில் சிக்குண்ட நிலையில் உள்ள சிறுத்தை புலியை மீட்க வன விலங்கு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஜர் தோட்டத்திலே சிறுத்தை புலி ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்
வெஞ்சர் தோட்ட தேயிலை தொழிற்சாலையின் பின் புறத்திலுள்ள காட்டுப்பகுதியில் 28.04.2016.காலை புலியொன்றை மீட்டுள்ளனர்
5 அடி நீளமும் 3 உயரமும் கொண்ட மேற்படி புலியானது இனம் தெரியாதோரால் மிருகம் வேட்டையாடுவதற்காக அடித்து வைத்துள்ள வலையில் சிக்குண்ட நிலையிலே பிரதேச மக்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்
வலையில் சிக்குண்ட நிலையில் உள்ள மேற்படி புலியை உயிருடன் மீட்க நலலதண்ணி வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்