மஹிந்த ராஜபக்ஸவை கொலை செய்ய சூழ்ச்சி செய்தவரே இந்த ஜொன்ஸ்டன் பொனர்ணடோ – சந்திம வீரக்கொடி.

273
மஹிந்த ராஜபக்ஸவை கொலை செய்ய சூழ்ச்சி செய்தவரே இந்த ஜொன்ஸ்டன் பொனர்ணடோ – சந்திம வீரக்கொடி:-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கொலை செய்ய சூழ்ச்சி செய்தவரே இந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நேர்மையாக இருக்காதவர்கள் மஹிந்தவை பிழையாக வழிநடத்தி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டு வரும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஒரு தடவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை கொலை செய்ய முயற்சித்திருந்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பிலான வழக்கு இன்னமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் காமினி லொக்குகே, கெஹலிய ரம்புக்வெல்ல போன்றவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை மூர்க்கத்தனமாக கடந்த ஆண்டுகளில் தாக்கியவர்கள் எனவும், தற்பொழுது சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பந்துல குணவர்தன, ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்களே 2001ம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் தோல்வியடைய சதித் திட்டங்களை தீட்டியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE