தலவாக்கலை மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமான தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின பேரணி தொடர்ந்து தலவாக்கலை நகரசபை மைதானத்தில் மேதினக்கூட்டமாக நடைபெற்றது.தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக்கூட்டமும், பேரணியும் தலவாக்கலை நகரில் 01.05.2016 அன்று இடம்பெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மே தின கூட்டத்தில் பல மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)