கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு தொடர்பான சிறப்புக்குழுவினரின் அறிக்கை தயார்நிலையில்! ரவிகரன் தெரிவிப்பு

279
கேப்பாப்புலவு மக்களின் காணிவிடுவிப்பு தொடர்பான சிறப்புக்குழுவினரின் அறிக்கையானது தயார்நிலையில் உள்ளதாக ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தெரிவித்தபடி சிறப்புக்குழுவொன்று அமைக்கப்பட்டு அவர்களின் அறிக்கை தயார்நிலையில் உள்ளதென வடமகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கேப்பாப்புலவு மக்கள் தமது 524ஏக்கர் நிலங்களும் விடுவிக்கப்படவேண்டும் என்று பலரிடமும் கோரிக்கை வைத்திருந்தனர். சனநாயக வழியில் போராட்டங்கள் பலவற்றையும் நடாத்தியிருந்தார்கள். முடிவுகள் ஏதும் கிடைக்காத நிலையில் கடந்த 2016-03-24ம் நாள் ஆறுமுகம் வேலாயுதபிள்ளை அவர்கள் சாகும் வரையிலான உணவுதவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தார். இதற்கு ஆதரவாக கிராமமக்களும் அடையாள உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மாவட்டத்தின் மாகாணசபை உறுப்பினர் என்ற வகையில் இந்த விடயங்களை கௌரவ முதலமைச்சர் அவர்கட்கு நாளாந்தம் தெரியப்படுத்திக்கொண்டிருந்தேன். இதன்பயனாக சுகயீனமுற்றநிலையிலும் முதலமைச்சர் அவர்களால் அனுப்பப்பட்ட கடிதத்தை வாசித்து ஒப்படைத்து பலரின் கோரிக்கைகளையும் ஏற்று அவ்வுணவுதவிர்ப்பு போராட்டம் நிறுத்தப்பட்டது.
முதலமைச்சர் அவர்களால் அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டபடி சிறப்புக்குழுவினர் கிராமத்தின் பிரதிநிதிகளையும் இதனோடு சம்பந்தப்பட்டவர்களையும் அணுகி கருத்துக்களைப்பெற்று அதற்குரிய அறிக்கையை தயார்செய்துள்ளனர்.
மேலும் முதலமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்படி மிகுதி நடவடிக்கைகளும் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
e2518448-6b1e-4e15-aece-5cbf9309bd08
SHARE