டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு மேலும் ஒருபின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து),பாப் டு பிளிஸ்சிஸ் (தென்ஆப்பிரிக்கா)ஆகிய முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் காயம் காரணமாகவிலகினர்.
இந்த நிலையில் புனே அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக 24 வயதான ஆல்-ரவுண்டர்மிட்செல் மார்சும் ( அவுஸ்திரேலியா) எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு துடுப்பாட்ட பயிற்சியில்ஈடுபட்ட போது வயிற்றின் இடதுபகுதியில் வலியால் அவதிப்பட்டார்.
கடந்த ஆட்டத்திற்கு ஓய்வு அளித்த போதிலும் வலி குணமாகவில்லை. ‘ஸ்கேன்’பரிசோதனையில் இடது பக்கவாட்டில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் உடனடியாக தாயகம் திரும்பும் அவருக்கு அங்கு காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது.