ரசிகர்கள் மத்தியில் மோதல்: காவல் நிலையம் மீது கற்களை வீசியதால் பரபரப்பு

310

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள காவல் நிலையம் மீது கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் பேர்ன் நகரில் கடந்த சனிக்கிழமை இரவு கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடந்துள்ளது. இந்த விளையாட்டின் போது ரசிகர்கர் மத்தியில் மோதல் ஏற்பட்டதை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்று நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இரவு 9 மணியளவில் சிறப்புரயில் ஒன்றில் ஏறி புறப்பட்டுள்ளனர்.

அப்போது, ரயில் Altstetten என்ற பகுதியில் வந்து நின்றுள்ளது. ரயிலிருந்து இறங்கிய ரசிகர்கள் தாங்கள் வைத்திருந்த கற்களை கொண்டு அருகில் உள்ள காவல் நிலையம் மீது வீசி தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலை எதிர்க்கொள்ள முடியாத பொலிசார் உடனடியாக ரப்பர் தோட்டாக்கள் கொண்ட தூப்பாக்கிகள் மூலம் ரசிகர்கள் மீது தாக்குதலை பிரயோகித்துள்ளனர்.

மேலும்,கலவரம் ஏற்படாமல் தடுக்க ரசிகர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியுள்ளனர்.

சில நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலைதொடர்ந்து ரசிகர்கள் மீண்டும் அதே ரயிலில் ஏறியுள்ளனர்.

ஆனால்,அப்போதும் ஆத்திரம் தீராத ரசிகர்கள் ரயில் ஜன்னல்கள் வழியாக காவல் நிலையம் மீது கற்களை வீசியவாறு சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் பொலிசார் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகிறார்.

காவல் நிலையத்தில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

625.117.560.350.160.300.053.800.210.160.70 (2)

SHARE