ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாது மஹிந்த அணியினரின் மே தின நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்காக மத்திய செயற்குழு எதிர்வரும் நாட்களில் ஒன்று கூடவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுசெயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அலகப்பெரும, மகிந்த யாப்பா அபேவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, குமார வெல்கம, பவித்ரா வன்னியாரச்சி, விதுர விக்ரமநாயக்க, பிரசன்ன ரணதுங்க உட்பட்ட 40 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ஆதரவு மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.