மஹிந்தவின் இந்திய விஜயத்தின் போது கைது செய்யப்பட்ட தமிழக ஊடகவியலாளருக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவு:

257
மஹிந்தவின் இந்திய விஜயத்தின் போது கைது செய்யப்பட்ட தமிழக ஊடகவியலாளருக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவு:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியா விஜயம் செய்திருந்த போது கைது செய்யப்பட்ட தமிழக ஊடகவியலாளருக்கு நட்டஈடு வழங்குமாறு இந்திய தேசிய மனித உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியாக கடமையாற்றிய மஹிந்த ராஜபக்ஸ, இந்தியாவின் ஆந்திர பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு தமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் உள்ளிட்ட பலரும் ஆந்திரா சென்றிருந்தனர்.

இவ்வாறு செய்தி சேகரிக்கச் சென்ற சன் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் எஸ்.குணசேகரனையும் அந்திர பிரதேச காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

மஹிந்தவிற்கு எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய கும்பலுடன் இணைத்து குறித்த ஊடகவியலாளரையும் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

சட்டவிரோதமான முறையில் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நட்ட ஈடாக 20000 இந்திய ரூபா வழங்கப்பட வேண்டுமெனவும் மனித உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

SHARE