மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்கள் கிடையாது – இராணுவம்:-

249
மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்கள் கிடையாது - இராணுவம்:-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்கள் கிடையாது என இராணுவம் அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவத்தில் ஒரு தொகுதியினர் வாபஸ் பெற்றுக் கொண்ட போதிலும் பாதுகாப்பு பிரச்சினை எதுவும் கிடயாது எ

ன இராணுவப் பேச்சாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு குறைப்பது குறித்த தீர்மானம் பாதுகாப்புப் பேரவையினால் எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரும் விசேட பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE