அரசாங்கத்தை கவிழ்க்க ஊர் ஊராக சுற்றுவதற்கு இராணுவம் தேவையில்லை – விஜித் விஜயமுனி:

301

அரசாங்கத்தை கவிழ்க்க ஊர் ஊராக சுற்றுவதற்கு இராணுவம் தேவையில்லை – விஜித் விஜயமுனி:

அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் ஊர் ஊராக சுற்றுவதற்கு இராணுவம் தேவையில்லை என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு அகற்றப்பட்டமை குறித்து அவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஊர் ஊராக செல்வதற்கு இராணுவக் குழு ஒன்றை வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செயற்பட்டால் சர்வதேச ரீதியில் சிக்கல்கள் ஏற்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். மிலிட்டரி மனோநிலையை உடையவர்கள் இவ்வாறு இராணுவத்தை தம் பக்கத்தில் வைத்துக்கொள்ள விரும்புவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE