சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பிணி

283

பொகவந்தலாவ பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவரை கர்ப்பமாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

gbbhgfbhngn

பாதிக்கப்பட்ட சிறுமி பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி என தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சிறுமி நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதித்த பின்னரே கர்ப்பிணி என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE