பாவற்குளம் 02 ஆம் யூனிற் வீதிகளைப் புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்…

292

 

பாவற்குளம் 02 ஆம் யூனிற் நெளுக்குளம் வீதி 06 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்…
81ae6586-02fc-4f8f-acc4-8e73e2063b3e 624d1af1-14a7-4b7a-b35f-b9d9d96840e2 2362609b-6151-4e8e-b6d9-d9bb492547a5 70347675-1ecd-4adf-8fed-6dfde4b211e3
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) மற்றும் பராமரிப்பு ஒதுக்கீட்டின் கீழ் 70 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான வீதிகளைப் புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்…
அதன் அடிப்படையில் வவுனியா மாவட்ட, செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட, பாவற்குளம் 02 ஆம் யூனிற் நெளுக்குளம் வீதியினை 06 மில்லியன் ஒதுக்கீட்டில் மாகாண சபையின் உறுப்பினர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கவும் அப்பகுதி மக்களது நலனைக் கருத்தில் கொண்டும் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் இந்த ஆண்டு முதலமைச்சர் உட்பட எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட தலா 6 மில்லியன் ஒதுக்கீட்டில், மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜெயதிலக அவர்களின் தெரிவின் அடிப்படையில் இவ்வீதியின் வேலைத்திட்டத்தை 02-05-2016 திங்கள் நண்பகல் 12 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்.
இன் நிகழ்வில் அமைச்சர் தனது உரையில் வவுனியா மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 70 மில்லியன் நிதியில் பின்வரும் வீதிகள் புனரமைக்கப்படவுள்ளதாகவும், பாவற்குளம் குளத்திற்கு நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் முகமாக மீன்குஞ்சுகளை இந்த ஆண்டு வைப்பிலிட்டுத் தருவதாகவும் தெரிவித்தார்.
01 – கல்நாட்டிகுளம் ஆசிகளும் வீதி – 04 மில்லியன்
02 – பிரமனாலங்குளம் பரப்புக்கடந்தான் வீதி – 06 மில்லியன்
03 – பூவரசங்குளம் துணுக்காய் வீதி – 04 மில்லியன்
04 – நெடுங்கேணி கூளாங்குளம் வீதி – 04 மில்லியன்
05 – பூவரசங்குளம் செட்டிக்குளம் வீதி – 10 மில்லியன்
06 – ஓமந்தை இளமருதங்குளம் வீதி – 04 மில்லியன்
07 – பாவற்குளம் 02 ஆம் யூனிற் நெளுக்குளம் வீதி – 06 மில்லியன்
08 – பள்ளமொட்டை மூன்றுமுறிப்பு வீதி – 3.5 மில்லியன்
09 – மணியர்குளம் பிரப்பமடு வீதி – 06 மில்லியன்
10 – கந்தபுரம் இராசேந்திரன்குளம் வீதி – 02 மில்லியன்
11 – குலுமடு மரைக்காரம்பளை வீதி கல்வெட்டு – 03 மில்லியன்
12 – புத்தூர் பாலமோட்டை வீதி கல்வெட்டு 01 – 02 மில்லியன்
13 – புத்தூர் கோவில் வீதி 02 – 3.18 மில்லியன்
நிகழ்விற்கு அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.மயூரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம், வீதி அபிவிருத்தித் திணைக்கள மன்னார் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் ரகுநாதன், வவுனியா மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் எம்.எம்.எம்.முனாஸ்  மற்றும் அக்கிராமத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE