கூட்டு எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது– கயந்த கருணாதிலக்க:

246
கூட்டு எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது– கயந்த கருணாதிலக்க:

கூட்டு எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஊடக மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியில் அங்கம் வகித்த போதும் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தற்போது எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் போதிலும் ஏனைய தரப்பினரின் கருத்துக்களுக்கு இந்த தரப்பினர் செவிமடுக்கத் தயாரில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்குமாறு அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE